மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி


மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி
x

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒத்திகை பயிற்சி

கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் படையில் போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பள்ளி ஐ.ஜி. ஸ்ரீசத்தீஷ் சந்திர வர்மா உத்தரவின் பேரில் கமாண்டோ ராஜேஸ்குமார், துணை கமாண்டோ ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் 80 வீரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் சுனில்குமார், பிரபு உள்பட 8 பேர் கொண்ட அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். நிலநடுக்கம், மழை, வெள்ள காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முதலுதவி சிகிச்சை

மேலும் டிரம்ப், கேன் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட படகில் அணையின் மைய பகுதிக்கு சென்று, அங்கு நீரில் தத்தளிக்கும் ஒருவரை மீட்டு, கரைக்கு திரும்புவது போன்று தத்ரூபமாக செயல்விளக்கம் அளித்தனர். மேலும் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் கூறுகையில், மத்திய ரிசர்வ் படையில் அதிவிரைவுப்படை பிரிவு வீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட படகு மற்றும் ரப்பர் படகு மூலம் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்தும், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது என்றனர்.


Next Story