பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி


பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, குன்னூரில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி, குன்னூரில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

பேரிடர் மீட்பு பயிற்சி

ஆண்டுதோறும் அக்டோபர் 13-ந் தேதி சர்வதேச பேரிடர் தேசிய பேரிடர் இன்னல் குறைப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்திய குமார் உத்தரவின் பேரில், ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. நிலைய அலுவலர்கள் பிரேமானந்தன், ஸ்ரீதர், சாமுவேல் பெஞ்சமின் உள்பட 15 பேர் அடங்கிய குழுவினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து நிலைய அலுவலர் பிரேமானந்தன் கூறியதாவது:-

மின்சாரம், கியாஸ், எண்ணெய், தொழிற்சாலைளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சமீபத்தில் வீடுகளில் கியாஸ் சிலிண்டர் வெடித்து, தீ விபத்து நடக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகிறது.

செயல்விளக்கம்

அதேபோல் பேரிடர் ஏற்பட்டால் தன்னை மற்றும் தன்னை சுற்றி இருப்பவர்களை காப்பது, பேரிடர் ஏற்படும் இடங்களில் உள்ள பொருள்களை கொண்டு அந்த இடர்பாடுகளை எவ்வாறு சமாளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் தீயணைப்பு துறையினர் பயன்படுத்தும் கருவிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

குன்னூரில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையின் போது எவ்வாறு செயல்படுவது, பேரிடர் காலங்களில் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்வது, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மேலும் தீபாவளியின் போது குழந்தைகள் எவ்வாறு பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story