பேரிடர் கால செயல்முறை விளக்கம்


பேரிடர் கால செயல்முறை விளக்கம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:30 AM IST (Updated: 24 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பேரிடர் கால செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

தென்காசி

தென்காசி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளம் மற்றும் தீ விபத்து காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து பல்வேறு இடங்களில் செயல்முறை விளக்கம் பொதுமக்கள் மத்தியில் செய்து காட்டி வருகிறார்கள். அதன்படி தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது வெள்ளம் மற்றும் தீ விபத்து காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது?, எவ்வாறு தீயை கட்டுப்படுத்துவது?, தீயில் சிக்கியவர்களை எப்படி மீட்பது?, அவர்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

மேலும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோயாளிகளை பேரிடர் காலங்களில் எவ்வாறு காப்பாற்றுவது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. இடர்பாடுகளில் சிக்கிய நோயாளிகள் மற்றும் பொதுமக்களை கயிறு மற்றும் ஏணி மூலம் மீட்பது, தீயணைப்பான்களை இயக்குவது போன்ற ஒத்திகை தீயணைப்புத்துறை கமாண்டோ வீரர்கள் மூலம் செய்து காட்டப்பட்டது.

அப்போது, மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர்கள் சுரேஷ் ஆனந்த், பிரதீப் குமார், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், தென்காசி தாசில்தார் சுப்பையன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் அரவிந்த் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், சிறப்பு நிலைய அலுவலர்கள் கணேசன், ஜெயரத்தினகுமார், ஜெயபிரகாஷ் பாபு மற்றும் தீயணைப்பு படையினர் இதற்கான பயிற்சியை அளித்தனர்.




Next Story