பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
குற்றாலம் பெண்கள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.
இந்து சமய அற நிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி வரலாற்று துறை மற்றும் சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெய் நிலா சுந்தரி தலைமை தாங்கினார். வரலாற்று துறை தலைவி பேராசிரியை அமிர்தவல்லி வரவேற்றார். முகாமின் சிறப்பு அழைப்பாளரும், பேரிடர் மேலாண்மை பயிற்சியாளருமான சத்யசாய் சேவா நிறுவன விருதுநகர் மாவட்ட தலைவர் சுரேஷ், பயிற்சியாளரும் கன்னியாகுமரி மாவட்ட அரசு கல்லூரி மாணவியுமான அஸ்வதி ஆகியோர் பேரிடர் குறித்து மாணவிகளுக்கு காணொலி காட்சி மூலம் விளக்கம் அளித்தனர்.
பேரிடர் காலங்களில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் சத்யசாய் சேவா நிறுவன நெல்லை மாவட்ட தலைவர் கண்ணன் சிறப்புரையாற்றினார். முகாமில் பேராசிரியைகள் கற்பகச் செல்வி, ரேணுகாதேவி, கல்யாணி, வெங்கடேஸ்வரி மற்றும் நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.