சென்னையில் ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்


சென்னையில் ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்
x

சென்னையில் ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை

ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கக்கோரி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னேற்ற நலச்சங்கத்தலைவர் தங்கபாண்டியன், செயலாளர் பாபு உள்பட பல மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டக்காரர்கள் கூறுகையில், பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்ற 72 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ளவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக பல கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதால் இந்தப்போராட்டம் நடத்தப்படுகிறது என்றும் கூறினர். இந்தநிலையில், கடந்த 11-ந்தேதி தொடங்கிய உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து 3 நாட்கள் நீடித்து வந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து சென்னை, புதுப்பேட்டை சமூக நலக்கூடத்திற்கு கொண்டு சென்றனர்.


Next Story