ராமேசுவரம் கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்
லியோ படத்தின் வெற்றிக்காக ராமேசுவரம் கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்தார்.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். லியோ திரைப்படமானது நாைள(வியாழக்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது.
லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெற வேண்டி அந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். அவர் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் புனித நீராடினார். தொடர்ந்து லியோ பட வெற்றிக்காக கோவிலில் உள்ள சாமி மற்றும் அம்பாள் சன்னதிக்கும் சென்று சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story