திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்


திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

திருவாரூர்

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1,179 இடங்கள்

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் மொத்தம் 1,179 இடங்களுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (மே) 31-ந் தேதி தொடங்கி கடந்த 6-ந் தேதி வரை நடந்தது.

இந்த நிலையில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உரிய இடங்களில் காலியாக உள்ள ஒரு சில பாடப்பிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கைக்காக இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) என 2 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கலந்தாய்வு வரும் 26-ந் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறும்.

வகுப்புகள் எப்போது தொடங்கும்?

எனவே இந்த கலந்தாய்வில் மாணவர்கள் தாங்கள் விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளுக்கு உரிய ஆவணங்களுடன் காலை 10 மணி அளவில் கலந்து கொள்ளவேண்டும். மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்களுடைய மாற்று சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வகுப்பு சான்றிதழ் மற்றும் விளையாட்டு பிரிவு போன்ற முன்னுரிமை பட்டியல் குறித்த சான்று, வங்கி புத்தகம், ஆதார் கார்டு நகல், வருமான சான்று, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். மேலும் நடப்பாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி முதல் தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story