திண்டுக்கல் முன்பதிவில்லாத ரெயில் திருச்சி-தாமரைப்பாடி இடையே மட்டும் இயங்கும்


திண்டுக்கல் முன்பதிவில்லாத ரெயில் திருச்சி-தாமரைப்பாடி இடையே மட்டும் இயங்கும்
x

திண்டுக்கல் முன்பதிவில்லாத ரெயில் திருச்சி-தாமரைப்பாடி இடையே மட்டும் இயக்கப்படுகிறது.

திருச்சி

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி-திண்டுக்கல் இடையே தினமும் இயக்கப்படும் முன்பதிவில்லாத எஸ்பிரஸ் ரெயில் (வ.எண்: 06498/06499) இன்று (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி வரை திண்டுக்கல்-தாமரைப்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் மேற்கண்ட நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து காலை 6.15 மணிக்கு திருச்சி புறப்பட வேண்டிய ரெயில் தாமரைப்பாடியில் இருந்து காலை 6.26 மணிக்கு புறப்படும். இதுபோல் திருச்சியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரெயில் தாமரைப்பாடியுடன் நிறுத்தப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் திண்டுக்கல்லுக்கு செல்லாது என்று திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story