பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
x

தினத்தந்தி புகாா் பெட்டி

ஈரோடு

வீணாகும் குடிநீர்

நசியனூர் சாமிகவுண்டன்பாளையம் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் அதிகமாக வீணாக வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் விளையாடும் போது தண்ணீரில் வழுக்கி விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சாமிக்கவுண்டன்பாளையம்

வடிகால் வசதி

பெருந்துறை-ஈரோடு ரோட்டில் உள்ள செட்டதோப்பு வளைவு பகுதி மிகவும் தாழ்வானதாகும். இந்த பகுதியில் ரோட்டின் இருபுறமும் வடிகால் வசதி இல்லை. மேலும் இந்த தாழ்வான ரோட்டு பகுதியை சுற்றிலும் உள்ள நிலங்கள் அனைத்தும் மேடாக உள்ளது. இதனால் மழை நின்று ஒரு வாரம் ஆன பிறகும் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் ரோட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் செட்டித்தோப்பு பகுதியிலேயே குளம் போல் தேங்கி நிற்கிறது. உடனே ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர் செல்ல வடிகால் வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகன ஓட்டுனர்கள், பெருந்துறை

சாலையை சீரமைக்க வேண்டும்

அந்தியூர்-வெள்ளித்திருப்பூர் ரோட்டில் கொல்லபாளையம் என்ற இடத்தில் உள்ள தாா்சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவா்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். அடிக்கடி விபத்து ஏற்பட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனா். இதுபோல் பல்வேறு இடங்களில் ரோடு பழுதடைந்துள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கொல்லபாளையம்

குவிந்துள்ள குப்பை

அம்மாபேட்டை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஆலாம்பாளையம்-வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் குப்பை கொட்டப்பட்டு் உள்ளது. இது மலைபோல் குவிந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. . எனவே குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வெள்ளித்திருப்பூர்

பாராட்டு

ஈரோடு சூளையில் இருந்து முதலிதோட்டம் செல்லும் ரோட்டில் பலர் குப்பைகளை கொட்டி வந்தனர்.. இதனால் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். அந்த குப்பைகளை சுத்தம் செய்து அதே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகளை வைத்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும். நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் பொதுமக்கள் சாா்பில் பாராட்டுக்களை தொிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரியசேமூர், ஈரோடு.


Next Story