திருத்தணி திரவுபதியம்மன் கோவில் திருவிழாவில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்
திரவுபதியம்மன் கோவில் திருவிழாவில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
திருவள்ளூர்
திருத்தணி காந்திநகர் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த, 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் டிராக்டரில் எழுந்தருளினர். முருக்கம்பட்டு பகுதி பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி டிராக்டரை ஊர்வலமாக திருத்தணி காந்தி நகர் பகுதியில் இருந்து பழைய சென்னை சாலை, வழியாக முருக்கம்பட்டு கிராமத்திற்கு இழுந்து சென்றனர். பின் உற்சவர் அம்மன் கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை சுபத்திரை திருமணம், வருகிற 3-ந்தேதி அர்ச்சுனன் தபசு மற்றும் 9-ந்தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா நடைபெறுகிறது.
Related Tags :
Next Story