செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 2 Aug 2023 12:45 AM IST (Updated: 2 Aug 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கப்பூர் ஊராட்சி வாளவராயன்குப்பம் கிராமத்தில் இளையவள் என்கிற செல்வ முத்துமாரியம்மன், சப்த கன்னிகள் கோவில் உள்ளது. இங்கு தீமிதி திருவிழா கடந்த 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா அபிஷேகம், கஞ்சிவார்த்தல், காத்தவராயன் சாமி திருக்கல்யாணம், பால்குட ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து கரகம் முன் செல்ல விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக காவடி, கூண்டு காவடி எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலின் அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். 16 அடி நீளம் அலகு குத்தி, கூண்டு காவடி எடுத்து பக்தர் ஒருவர் தீமிதித்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story