மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே ஆவியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்திருவிழா மற்றும் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலையில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னிக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோவிலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் ஏராளமான போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story