மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் வல்லாங்குளத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் வல்லாங்குளத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அரசாணி குளத்தில் இருந்து பால் காவடி, பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story