காட்டுமன்னார்கோவில் அருகே காத்தாயி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்


காட்டுமன்னார்கோவில் அருகே காத்தாயி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 13 Aug 2023 12:15 AM IST (Updated: 13 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே காத்தாயி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவில் வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நேர்த்திக்கடன்

பின்னர் வடவாற்றில் இருந்து பக்தர்கள் சக்தி கரகத்துடன், தீச்சட்டி, காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள், கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story