திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

சத்துவாச்சாரி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் திரவுபதிஅம்மன் உடனுறை தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பக்தர்கள் மஞ்சள் நீராடி பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூக்குழி தீபாராதனை நடந்தது. விழாவில் வேலூர் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை முத்தரையர் சமுதாய மக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர். இதனையொட்டி போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. முன்னதாக காலையில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது.


Next Story