60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேக பூஜை


60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேக பூஜை
x

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேக பூஜை நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது

விழுப்புரம்

விழுப்புரம்

தர்மராஜா பட்டாபிஷேக பூஜை

விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமைவாய்ந்ததுமான தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அத்துடன் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரியம் மிகுந்த தர்மராஜா பட்டாபிஷேக பூஜை நடைபெறுவது சிறப்பாகும். அந்த வகையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இவ்விழா கடந்த 23-ந் தேதி தொடங்கி அரிசிகவுண்டன்பாளையம் நாகரத்தினம், பாரத சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தொடர்ந்து, நாளை(திங்கட்கிழமை) காலை அக்னி பூஜை, கலச ஸ்தாபனம், பூர்ணாகுதியும், மாலையில் கும்ப பூஜை, காப்பு கட்டுதலும் நடைபெறுகிறது.

பந்தல் அமைக்கும் பணிகள்

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் காலை 6 மணிக்கு தர்மராஜா பட்டாபிஷேக பூஜையும், 7 மணிக்கு பட்டாபிஷேக மங்கள ஆரத்தி தசதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி மேல்பாதி கிராமத்தில் சாமி வீதிஉலா நடைபெறும் முக்கிய வீதிகள்தோறும் பாரம்பரிய முறைப்படி பச்சைகீற்று(தென்னை ஓலை) கொண்டு பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலம், புலி ஆட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், உறுமி மேளம் மற்றும் இசைக்கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story