முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மேலூரில் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர
மதுரை
மேலூர்,
மேலூரில் நகராட்சி அலுவலகம் அருகே பிரசித்திபெற்ற நாகம்மாள் கோவில் உள்ளது. இங்கு 2 நாள் திருவிழா நடைபெற்றது. முதல் நாளன நேற்று முன்தினம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் 5 மணி நேரமாக ஊர்வலமாக வந்து வழிபட்டனர். 2-ம் நாளான நேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடுமையான விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து மேலூர் நகரில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தி நாகம்மாளை வழிபட்டனர். மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story