கஞ்சி கலயம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
திருக்கோஷ்டியூரில் கஞ்சி கலயம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை தேவஸ்தானம் திருக்கோஷ்டியூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஆடி கஞ்சிக்கலய திருவிழாவை முன்னிட்டு நாகபாஷதெருவி்ல் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடி முதல் நாள் காப்புக்கட்டி பெண்கள் விரதம் கடைபிடித்து வந்தனர்.
இதையொட்டி நேற்று முன்தினம் கஞ்சிக்கலயம் சுமந்த செவ்வாடை அணிந்த பெண்கள் ஊர்வலமாக சன்னதிதெரு, கீழத்தெரு, தேவர்சிலை,, முத்தையா கோவில் வழியாக மேலரதவீதியை வந்தடைந்தனர். பின்னர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் வழிபாடு மேற்கொண்டு முனியய்யா கோவில் வழியாக வடக்குவாசல் செல்லியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அங்கு கஞ்சிக்கலயங்களை வேப்பிலை போர்வையில் அடுக்கி தீபாராதனை நடத்தினர். பின்னர் செல்லியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக ஒம்சக்தி மன்ற நிர்வாகி மனோன்மணி, மகேந்திரன் ஆகியோர் செயல்பட்டனர்.