திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோடை விடுமுறையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர்
முருகன் கோவில்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். கோடை விடுமுறை மற்றும் வாரவிடுமுறை நாளான நேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசை
இந்தநிலையில் நேற்று முருகன் கோவில் பொதுவழியில் பக்தர்கள் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மேலும் ரூ.100 மற்றும் ரூ.150 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில், ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை வழிப்பட்டனர். திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story