தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல்
வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் ஆயுதபூஜை மற்றும் நவராத்திரி விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக குடகனாற்றில் சக்தி கிணற்றில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதனைத்தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறியதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் முன்பு திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரண்டனர். தொடர்ந்து பூசாரி ராஜேந்திரன், வரிசையாக அமர்ந்திருக்கும் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Related Tags :
Next Story