சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் அனுமதி


சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் அனுமதி
x

எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மலைக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் மலைஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தாலும், ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தாலும் கோவிலுக்கு செல்ல அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைகாசி பிரதோஷத்தை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story