ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் வல்லம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீ்ர்மானம்


ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள்  வல்லம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீ்ர்மானம்
x

ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் வல்லம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீ்ர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம்

செஞ்சி,

வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் 25 ஊராட்சிகளில் தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்பட பணிகள் ரூ.67 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் செயல்படுத்தவும், ரூ.44 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் 3 இடங்களில் தார் சாலைகள் அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை தலைவர் மலர்விழி அண்ணாதுரை, மேலாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் கோபால், ஏழுமலை, கம்சலா, ராஜேந்திரன், பத்மநாபன், பக்தவச்சலம், கலைவாணி, இந்துமதி உள்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Next Story