மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்தன், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு
மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்தன், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் திருவையாறு ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகள், கலைஞரின் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப டோக்கன் வழங்கும் முகாம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
திருவையாறு ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகள், கலைஞரின் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப டோக்கன் வழங்கும் முகாம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்தன், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து திருவையாறு அரசர் கல்லூரில் கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம் வழங்குவதற்கான நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.
அதை தொடர்ந்து கல்யாணபுரம் 2-ம் சேத்தி ஊராட்சி வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் நடைபெற்று வரும் ரூ.30.60 லட்சம் மதிப்பில் 2 பள்ளி வகுப்பறைகள், ரூ.7.81 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமையலறை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்தன், கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், செயற்பொறியாளர் செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பானுமதி, ஜான்கென்னடி, தாசில்தார் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.