ரூ.11 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.11 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
x

ரூ.11 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கியது.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஜெமின் பேரையூர், சாத்தனூர், கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களுக்கு உயர்மட்ட மேம்பாலம், தார் சாலை அமைத்தல், பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரம்பியம், பெரியம்மாபாளையம், குன்னம், சின்ன வெண்மணி, பெரிய வெண்மணி, கொத்தவாசல், நல்லறிக்கை, காடூர் மற்றும் புதுவேட்டக்குடி ஆகிய கிராமங்களில் ஏரி, குளம் தூர்வாருதல், தார் சாலைகள் அமைத்தல் ஆகிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களில் மொத்தம் ரூ.11 கோடியே 69 லட்சத்து 69 ஆயிரம் செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் அரியலூர் முதல் திட்டக்குடி வழித்தடத்தில் புதுவேட்டக்குடியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள காடூர் கிராமம் வழியாக செல்லும் வகையில் டவுன் பஸ்சை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் மக்களுடன் அமைச்சர், கலெக்டர் ஆகியோர் பஸ்சில் பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story