மரக்காணம், ஒலக்கூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு


மரக்காணம், ஒலக்கூர் ஒன்றியத்தில்  வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம், ஒலக்கூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்


திண்டிவனம்,

மரக்காணம், ஒலக்கூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, ஒலக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்பாக்கம் பெண்கள் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் முதன்மை செயலாளர் ஹர்சகாய் மீனா ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள வசதிகள், வழங்கப்படும் உணவு குறித்து மாணவிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

தரிசு நிலங்கள்

பின்னர் ஒலக்கூரில் கால்நடை துறை சார்பில் நடந்து வரும் கால்நடைகளுக்கான சிறப்பு முகாமையும் அவர் பார்வையிட்டார். அப்போது, கறவை மாடு வைத்திருப்பவர்களுக்கு பால் கறக்கும் எந்திரம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 39 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.

மேலும் மரக்காணம் ஒன்றியம் ஜக்காம்பேட்டையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் 16 ஏக்கர் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்காக உளுந்து விதைத்து உழவு பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

கலந்துரையாடல்

திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்பாடுகள் குறித்து மாணவ மாணவிகளுடன் முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா கலந்துரையாடினார்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய்மீனா பார்வையிட்டு அந்த அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்து அன்றாட பணிகளை தொய்வில்லாமல் உடனுக்குடன் முடித்திட வேண்டும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதிரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் (ஊரக வளர்ச்சி முகமை), திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பெரியசாமி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அன்பழகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி,

மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story