தேவர் ஜெயந்தி விழா


தேவர் ஜெயந்தி விழா
x

வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வள்ளியூரில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட பொருளாளரும் முன்னாள் எம்.பி.யுமான சவுந்திரராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் பொன்னரசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்குமார், எட்வர்ட்சிங், சந்திரமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராதாபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் நெல்லை மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். இதில் மாநில மகளிர் அணி துணை தலைவர் கனிஅமுதா, மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

களக்காட்டில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தி.மு.க. சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.சி.ராஜன் தலைமையில் முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், நகராட்சி கவுன்சிலருமான ஜின்னா, அவைத்தலைவர் கோபால் பாண்டியன், ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். களக்காடு நகர தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், யூனியன் துணை தலைவர் விசுவாசம், நகர செயலாளர் மணிசூரியன், ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் மனித உரிமைகள் அணி மாவட்ட தலைவர் ராம்சிங், நகர பொறுப்பாளர் ஜெபஸ்டின் ராஜ், மாவட்ட செயலாளர் சசிகுமார், மாவடி தர்மலிங்கம், பிராங்களின் உள்பட பலர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

வள்ளியூரில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நெல்லை புறநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில், மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் விஜயகணேசன், ஒன்றிய செயலாளர் ஜெயசேகர பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆல்வின் ராஜா டேவிட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story