மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்


மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்
x

மதுரை ஐகோர்ட்டில் வருகிற 6-ந்தேதி முதல் பல்வேறு வகையிலான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

மதுரை

மதுரை ஐகோர்ட்டில் வருகிற 6-ந்தேதி முதல் பல்வேறு வகையிலான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

பொதுநல வழக்குகள்

அதன் விவரம் வருமாறு:-

மதுரை ஐகோர்ட்டு முதல் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் பொதுநல மனுக்கள், அனைத்து ரிட் மனுக்கள், கடந்த ஆண்டில் இருந்து தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள ரிட் அப்பீல் மனுக்கள், 2021-ம் ஆண்டில் இருந்து தாக்கலாகி நிலுவையில் உள்ள சிவில் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனர்.

2-வது டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆட்கொணர்வு மனுக்கள், அனைத்து கிரிமினல் அப்பீல் மனுக்கள், 2021-ம் ஆண்டு வரை தாக்கலான ரிட் அப்பீல் மனுக்கள், 2020-ம் ஆண்டு வரை தாக்கலான சிவில் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனர். அதேபோல 2016-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள 2-ம் நிலை அப்பீல் மனுக்களை நீதிபதி வேல்முருகன் விசாரிக்கிறார்.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மணல் மற்றும் தாதுக்கள், பொது சிறு மனுக்கள், நிலச்சீர்திருத்தம், நில குத்தகை, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட நிலச்சட்டம் தொடர்பான மனுக்கள், சுதந்திர போராட்ட தியாகி பென்ஷன் வழக்குகள், 2022-ம் ஆண்டில் இருந்து தாக்கலான விவசாய உற்பத்தி சந்தை தொடர்பான வழக்குகள், 2022-ம் ஆண்டில் இருந்து குறிப்பிட்டு வேறு தனி அமர்வில் தாக்கல் செய்யப்படாத ரிட் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

தொழிலாளர் மற்றும் சேவை

நீதிபதி சதீஷ்குமார், 2021-ம் ஆண்டில் இருந்து தாக்கலான முதல் நிலை மற்றும் 2-ம் நிலை சிவில் சிறு அப்பீல் வழக்குகளை விசாரிக்கிறார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2020-ம் ஆண்டில் இருந்து தாக்கலாகி நிலுவையில் உள்ள தொழிலாளர் மற்றும் சேவை தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறார்.

நீதிபதி அப்துல் குத்தூஸ், 2017-ம் ஆண்டில் இருந்து தாக்கலான 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி தாரணி, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 407-வது பிரிவு மற்றும் 482 ஆகிய பிரிவுகளின்கீழ் தாக்கலான கிரிமினல் வழக்குகளை விசாரிக்கிறார்.

நீதிபதி ஆஷா, வரி (மோட்டார் வாகன வரி, கலால், ஏற்றுமதி-இறக்குமதி வரி உள்பட), சுங்கம் மற்றும் மத்திய வரி, வனம், தொழில்துறை, அறநிலையத்துறை, வக்பு வாரியம் தொடர்பான வழக்குகள், 2020, 2021-ம் ஆண்டுகளில் தாக்கலான நிலச்சட்டம் தொடர்பான வழக்குகள், சுதந்திரபோராட்ட தியாகி பென்ஷன் வழக்குகள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், விவசாய உற்பத்தி சந்தை தொடர்பான வழக்குகளும், தனி அமர்வு விசாரிக்கும் குறிப்பிட்ட வழக்குகளை தவிர இதர மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

அப்பீல் வழக்குகள்

நீதிபதி இளந்திரையன், ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள், நிபந்தனைகளை தளர்த்த கோரும் மனுக்கள், ஜாமீன் மற்றும் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனுக்கள் உள்ளிட்டவைகளையும் 2019-ம் ஆண்டு வரை தாக்கலான கிரிமினல் அப்பீல் மனுக்களையும் விசாரிக்கிறார்.

நீதிபதி சரவணன், நிறுவனங்களின் அப்பீல் மனுக்கள், சிவில் ரிவிஷன் மனுக்கள் போன்றவற்றை விசாரிக்கிறார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தாக்கலான மணல் மற்றும் தாதுக்கள், நிலச் சட்டம் தொடர்பான மனுக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், விவசாய உற்பத்தி சந்தை, சுதந்திரப் போராட்ட தியாகி பென்ஷன் மற்றும் பொது ரிட் மனுக்களையும் விசாரிக்கிறார்.

நீதிபதி இளங்கோவன், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 407 மற்றும் 482 ஆகிய பிரிவுகளின் கீழ் 2022-ம் ஆண்டு முதல் தாக்கலான கிரிமினல் மனுக்களை விசாரிக்கிறார்.

ஊழல் தடுப்பு, சி.பி.ஐ.

அதேபோல நீதிபதி முரளி சங்கர், சி.பி.ஐ., ஊழல் தடுப்பு வழக்குகளையும், 2019-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள கிரிமினல் மனுக்களையும் 2020-ம் ஆண்டு முதல் தாக்கலான கிரிமினல் அப்பீல் மனுக்களையும் விசாரிக்கிறார்.நீதிபதி ஸ்ரீமதி, 2019-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள தொழிலாளர் மற்றும் சேவை தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறார்.நீதிபதி விஜயகுமார், 2020-ம் ஆண்டு வரை தாக்கலான சிவில் சிறு அப்பீல் மனுக்களையும், சிவில் 2-ம் நிலை அப்பீல் மனுக்களையும் விசாரிக்கிறார்.

மேற்கண்ட தகவல்களை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.


Related Tags :
Next Story