மதுரையில் போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் அழிப்பு
மதுரையில் போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது
மதுரை
கொட்டாம்பட்டி,
மேலூர் மதுவிலக்கு போலீசார் கடந்தாண்டு மதுபான கடை விடுமுறை நாட்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த வழக்குகளில் சுமார் 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சங்கீதா உத்தரவின் பேரிலும் மதுவிலக்கு காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் அறிவுறுத்தலின்படி பறிமுதல் செய்த 3 ஆயிரம் மதுபாட்டில்களை அழிக்கும் பணியில் மதுவிலக்கு போலீசார் நேற்று ஈடுபட்டனர்.அதன்படி மேலூரை அடுத்துள்ள மலம்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறமுள்ள மலைப்பகுதியில் மதுபான பாட்டில்களை மதுவிலக்கு காவல் துணை சூப்பிரண்டு இளவரசு மற்றும் மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை முன்னிலையில் தீவைத்து அழித்தனர்.
Related Tags :
Next Story