ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் அழிப்பு
ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் அழிக்கப்பட்டது.
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் மாம்பழம் மொத்த விற்பனை செய்யப்படும் சுமார் 5 மாம்பழ குடோன்களை உணவு பாதுகாப்பு துறையின் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது ரசாயனம் (எத்திலீன் ஸ்பிரே) மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5,270 கிலோ மாம்பழங்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சட்டப்பூர்வ 2 மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வுக்காக சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. மேலும் துறையூர் பகுதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 வாழைத்தார்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story