மிளகு குளத்தை தூர்வார வேண்டும்


மிளகு குளத்தை தூர்வார வேண்டும்
x

கூத்தாநல்லூர் அருகே மிளகு குளத்தை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே மிளகு குளத்தை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிளகு குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, சேகரை கிராமத்தில் மிளகுகுளம் உள்ளது. இந்த குளத்தை சேகரை, பூதமங்கலம், கீழகண்ணுச்சாங்குடி, மிளகுகுளம் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், குளத்தின் அருகில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களும் இந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தின் 4 கரையோரத்திலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை குளத்தில் தேக்கி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

தூர்வார கோரிக்கை

இதனால், ஆற்றில் தண்ணீர் வராத கோடை காலங்களிலும், மிளகுகுளம் தண்ணீர் வற்றாத குளமாக திகழ்ந்தது. அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் சீராக இருந்தது. தற்போது இந்த குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும், குளத்தில் தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் சீரமைப்பு செய்யப்படாமல் உள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். தற்போது, கிராம மக்கள் பயன்படுத்தும் மிளகுகுளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மிளகு குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story