கொத்தங்குடி குளம் தூர்வாரப்படுமா?


கொத்தங்குடி குளம் தூர்வாரப்படுமா?
x

கொள்ளிடம் அருகே கொத்தங்குடி குளம் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பாா்த்து உள்ளனா்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே கொத்தங்குடி குளம் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பாா்த்து உள்ளனா்.

கொத்தங்குடி குளம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் ஊராட்சி கொத்தங்குடி கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. இந்த குளம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாமல் குப்பைகள் குவிந்து கரைகள் தூர்ந்து போய் உள்ளது. மேலும் கொத்தங்குடி கிராமத்தில் சாலையின் நடுவில் இந்த குளம் உள்ளதால் சாலையில் இரவு நேரங்களில் வரும் மக்கள் குளம் என்று தெரியாமல் குளத்துக்குள் விழும் நிலை உள்ளது.

தடுப்புச்சுவர்

எனவே குளத்தை தூர் வாரி குளத்தின் நான்கு பக்கங்களிலும் தடுப்பு சுவர் அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் அனந்தராமன் கூறியதாவது:-ஆர்ப்பாக்கம் ஊராட்சியில் அதிக அளவில் குளங்கள் உள்ளன தற்பொழுது கொத்தங்குடி கிராமத்தில் உள்ள குளம் மிகவும் தூர்ந்து போய் பெரும் பள்ளமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. ஆர்ப்பாக்கம் மற்றும் சீர்காழி சென்று விட்டு கிராமத்துக்கு வெளி நபர்கள் வந்தால் சாலையின் நடுவே பெரிய குளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுகிறார்கள்.எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி கொத்தங்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர் வாரி குளத்தின் 4பகுதிகளிலும் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story