நவீன எந்திரத்தை பயன்படுத்தி பருத்தி அறுவடை செயல் விளக்கம்
நவீன எந்திரத்தை பயன்படுத்தி பருத்தி அறுவடை செயல் விளக்கம் நடந்தது.
பெரம்பலூர்
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நவீன எந்திரம் கொண்டு பருத்தி அறுவடை செய்வது குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது. இந்த செயல் விளக்கத்தை பிரபாகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குனர் கலாராணி, பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். இதில் நவீன எந்திரம் கொண்டு பருத்தி அறுவடை செய்வது, அதற்கு ஏற்ப சரியான இடைவெளியில் விதைகளை ஊன்றும் முறைகள் ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. இதில் பருத்தி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Related Tags :
Next Story