கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியில் இங்கிலாந்து துணை மேயர் பங்கேற்பு


கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியில் இங்கிலாந்து துணை மேயர் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Aug 2022 1:55 PM IST (Updated: 6 Aug 2022 1:55 PM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் நாளை நடைபெறும் மாரத்தான் போட்டியில் இங்கிலாந்து துணை மேயர் பங்கேற்க உள்ளார்.

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போட்டி தொடங்க உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இது 5, 10, 21 மற்றும் 42 கிலோ மீட்டர் தூரம் என 4 பிரிவுகளாக நடைபெறவிருக்கிறது. இதில் 10 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்க வருகிறார்கள். இந்தியாவின் 20 மாநிலங்களில் இருந்து வீரர்கள் வருகிறார்கள்.

42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. 10 கிலோ மீட்டர் போட்டிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

5 கிலோ மீட்டர் போட்டிக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.15 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு தொகைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டி நடைபெறும் தினத்தன்று காலை 7.45 மணியளவில் ஆல்காட் பள்ளி மைதானத்தில் வழங்க இருக்கிறார்.

இந்த மாரத்தான் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் அமீஸ்புரி நகரின் துணை மேயர் மோனிகா தேவேந்திரன் பங்கேற்க்க உள்ளார். இந்நிலையில் துணை மேயர் மோனிகா தேவேந்திரனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, உபகரணங்களை வழங்கினார்.


Next Story