மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
சென்னை,
தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக்கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி,மொழிபெயர்ப்பு பணி,மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
182 தற்காலிக ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழுக்கள் வாயிலாக நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவிட்டுள்ளது.
மேலும் ரூ.7,500,ரூ.10,000,ரூ.12,000 என்ற தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்.தலைமை ஆசிரியர்களே நியமனம் செய்துகொள்ளலாம்.தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story