புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு - விழாக்குழுவினர் முற்றுகை போராட்டம்


புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு - விழாக்குழுவினர் முற்றுகை போராட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடக்க இருந்த ஜல்ல்க்கட்டுக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அம்மாட்ட கலெக்டர் கவிதா ராமு அனுமதி தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதலை முறையாக அமல்படுத்தாததால் வேறு தேதிக்கு மாற்ற மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த விழா கமிட்டியினர், அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டக்குழுவினருடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் தச்சங்குறிச்சியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story