டெங்கு பாதிப்பு - கடலூர் மருத்துவமனையில் மேலும் 5 பேர் அனுமதி
கடலூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சென்னை,
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல, டெங்கு தடுப்பு பணிகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடலூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .கடலூரில் டெங்கு பாதிப்புக்கு ஏற்கனவே 6 பேர் சிச்சை பெறும் நிலையில் , தற்போது பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story