ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 1:30 AM IST (Updated: 11 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.50 வழங்க கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

நீலகிரி

கோத்தகிரி

மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் தும்பூர் ஐ.போஜன் தலைமை தாங்கினார். மேற்கு நாடு சீமை அமைப்பாளர் அர்ஜூனன், ஆலோசனை குழு நிர்வாகிகள் தேவராஜ், சதீஷ் பெள்ளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி சுற்றுலாத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், இன்கோசர்வ் இயக்குனர், இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்ற கூட்டத்தில் பச்சை தேயிலைக்கு கொள்முதல் விலை படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், கொள்முதல் விலை மாதந்தோறும் படிப்படியாக குறைந்து வருவதால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பிரதமர், தமிழக முதல்-அமைச்சர் ஆகியோரை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சந்தித்து மனு அளிக்க வேண்டும். ஏற்கனவே பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.50 நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகளை ஒன்று திரட்டி இந்திய தேயிலை வாரியம் முன்பு கடந்த ஆண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story