வெள்ளாடுகள் குடற்புழு நீக்க செயல் விளக்க முகாம்


வெள்ளாடுகள் குடற்புழு நீக்க செயல் விளக்க முகாம்
x

கடலாடி கிராமத்தில் வெள்ளாடுகள் குடற்புழு நீக்க செயல்விளக்க முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கடலாடி கிராமத்தில் வெள்ளாடுகள் குடற்புழு நீக்க செயல்விளக்க முகாம் நடந்தது.

கலசபாக்கத்தை அடுத்த கடலாடி கிராமத்தில் வேளாண்மைத்துறை 'அட்மா' திட்டத்தின் மூலம் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் உண்ணி நீக்கம் செய்தல் தொடர்பான செயல் விளக்க முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ராமநாதன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை டாக்டர் பவித்ரா கலந்து கொண்டு வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் உண்ணி நீக்கம் செய்தல் தொடர்பான செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கால்நடைகளுக்கு குடற்புழுக்களால் ரத்தசோகை ஏற்படும், எடை குறையும், வயிற்றில் வீக்கம் உண்டாகும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், உண்ணிகளால் உண்ணி காய்ச்சல் வரும். இவைகளை தவிர்த்திட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் உண்ணி நீக்கம் செய்தல் அவசியம் என விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் கலசபாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை அலுவலர் பழனி, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story