வாணியம்பாடியில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்


வாணியம்பாடியில்  வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்
x

வாணியம்பாடியில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் அக்ரம் தலைமை தாங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் எம்.முஹம்மத் அய்யூப் வரவேற்றார்.

இதில் தேசிய பொருளாளர் வி.அதீகுர் ரஹமான், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், நகர தலைவருமான சையத் ஜாவீத், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பேச்சாளர் ஜி.முஹம்மத் பைஜான், கஜேந்திரன், அப்பாதுரை, மதன கவி, ஆர்.முல்லை, முப்தி இனாமுல் ஹக் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாடத்தில் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீன் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் நகர தலைவர் சையத் சலீம் நன்றி கூறினார்.


Next Story