விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அம்பையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை அரசு ஆஸ்பத்திரி முன்பாக விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். அரசு ஆஸ்பத்திரி நுழைவுவாயில் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளுக்கான பெயர் பதிவு செய்வதற்கு கையூட்டு பெறுவதாக வீடியோ பரவியது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் வெங்கடாசலபதியிடம் மனு வழங்கினர். அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் கையூட்டு பெறுவதாக வீடியோ பரவியது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியில் அம்பை போலீசாரும் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story