நீர், நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நீர், நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியம் ஆத்தூர் நன்னாவரம் பகுதிக்குட்பட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், புத்தநந்தல் அணைக்கட்டு பகுதியில் ஆக்கிரமிப்பால் காணாமல் போன ஓடைகளை கண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலமேலு தலைமை தாங்கினார். திருநாவலூர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்கமணி ரகு, பாக்கியலட்சுமி, கிளை செயலாளர்கள் சிவகுமார், கணேசன், மூர்த்தி, கரிகாலன் கலியன், தங்கமணி பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை, ஒன்றிய செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நீர், நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பினர்.