ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு கால அவகாசம் இன்றி, விடுமுறை தினங்களிலும் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது பணி சுமையை திணிக்க, நம்ம ஊரு சூப்பரு பிரச்சார இயக்கம் மற்றும் நடவடிக்கை மேற்கொள்வதை கைவிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் செல்வின் மனோ தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க மாவட்ட துணை தலைவர் முத்துப்பாண்டி, அரசு ஊழியர் சங்கம் பிரான்சிஸ், சாலை பணியாளர் சங்கம் ஹரிபால கிருஷ்ணன், சந்திரபோஸ் ஆகியோர் பேசினா்.
Related Tags :
Next Story