வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளவரசன், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் நல சங்கத்தலைவர் கணேசன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சியில் மணல் கொள்ளையை தடுக்கச்சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சமீப காலமாக அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story