விழுப்புரத்தில்வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று மாலை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ்முனியனின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடபதி அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சங்கரலிங்கம், இணை செயலாளர் விமல் சித்தார்த்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story