அரசு பணியாளர் சங்கங்களின் போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம்


அரசு பணியாளர் சங்கங்களின் போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம்
x

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கங்களின் போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கங்களின் போராட்ட குழு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் முன்தேதியிட்டு அறிவித்த அகவிலைப்படி நிலுவை ஊதியம் வழங்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு குழு மூலம் ஊதியம் வழங்காமல் நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோகத் திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கே வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நியாயவிலைக் கடை பணியாளர் சங்க ஓய்வு பெற்ற மாநில அமைப்பாளர் நெடுஞ்செழியன், மாநில பொருளாளர் பிரகாஷ், ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிரணி மாநில துணை அமைப்பாளர் இளமதி நன்றி கூறினார்.


Next Story