வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

வெளிப்படை தன்மையோடு மாறுதல் கலந்தாய்வு நடத்தி வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்களுக்கு மாறுதல் வழங்கிடக்கோரி நேற்று கரூர் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்றார். மாநில செயலாளர் சங்கர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story