அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் தொகுப்பூதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகை, முடக்கப்பட்ட சரண்டர், நிலுவை அகவிலைப்படி மற்றும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார சங்க தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய்த் துறை இணை செயலாளர் செல்வகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். வட்டார கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் கருப்பசாமி, வட்டார சங்க துணைத் தலைவர் சகாயம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதேபோன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் முன்பும் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
Related Tags :
Next Story