அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ெரயிலில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனியன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் குப்பன், மாநில செயலாளர் குரு சந்திரசேகரன், மாவட்ட துணைத்தலைவர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள எழுப்பினர்.


Next Story