சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

காவேரிப்பாக்கத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவேரிப்பாக்கம் ஒன்றிய சங்க தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். அனைத்து மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் 50-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story