சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தென்காசி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அனைத்து துறை காலிபணியிடங்களிலும் நிரப்பி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஊதியம் ரூ.6,750 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தலைவர் சங்கரேஸ்வரி தலைமை தாங்கினார். செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் விளக்கவுரையும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன் சிறப்புரையும் ஆற்றினர். முடிவில் ஒன்றிய துணைத்தலைவர் சக்திமாரி நன்றி கூறினார்.

கடையநல்லூர்

இதேபோல் கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க ஒன்றிய தலைவர் ஹமிதாள், செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கடையம் யூனியன் அலுவலக வளாகத்திலும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story